ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னணி குறித்து அம்பிட்டிய சுமணரத்தின தேரர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் குறிப்பிட்டதாவது,
ஈஸ்டர் தொடர் தாக்குதல்
“ 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார்.
சஹ்ரானை சிறைப்படுத்த தீர்ப்பளித்த மட்டக்களப்பு நீதிபதி பின்னர் விடுமுறையில் செல்கிறார். அவர் விடுமுறையில் சென்ற இரண்டு நாட்களின் பின் அவருக்காக பதில் நீதிபதி சேவையில் இருந்தார்.
அப்போது அவருக்கு பிணை வழங்கியது யார்? பிணையாளியாக நின்றது யார்? என ஏன் பரிசோதனை நடத்தவில்லை.
பிணை வழங்கிய பின்னர் சஹ்ரான் எங்கு சென்றார்,தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?
காத்தாண்குடியில் தளம்
தாக்குதலின் பின்னர் அவர் வெளியிட்ட காணொளி நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கையில் (ISIS) இருப்பதாக தெரியவந்தது.
நான் மட்டக்களப்பில் 35 வருடங்களாக இருக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இருந்ததால் இவை ஒவ்வொன்றும் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.
சஹ்ரான் தனது போதனைகளுக்காக முதன் முதலில் காத்தாண்குடியில் தனக்கான தளத்தை அமைத்து கொண்டு முஸ்லிம் மக்களை திரட்டும் போது நான் இது தொடர்பில் தெரிவித்தேன்.
அன்று சில ஊடகங்களில் இவை செய்திகளாக சென்றன.
நீண்ட காலம் கடந்துள்ளதால், அதாவது பல வருடங்கள் கடந்து விட்டதால் சில சம்பவங்கள் ஞாபகமில்லை.
காவல்துறை புலனாய்வு திணைக்களத்திற்கு அன்று நான் வாக்குமூலம் வழங்குவதாக கூறினேன். என்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தேன்.
மேலும், ஆனால் யாரும் எனக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை. அன்று நாங்கள் கத்தி கத்தி சொன்னோம். இவ்வாறான குழுக்கள் உருவாவதாக, ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதை கணக்கிலும் எடுக்கவில்லை” என கூறியுள்ளார்.
