Home இலங்கை அரசியல் நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் – பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூடுகள் – பிண்ணனியில் முன்னாள் அரசியல்வாதிகள் : அம்பலப்படுத்திய எம்.பி

0

நாட்டில் துப்பாக்கி கலாசாரம் உட்பட ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகளின் தொடர்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (Kandasami Prabhu) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டில் துப்பாக்கி கலாசாரம் என்பது பாதாள உலகம் கோஸ்டிகளின் சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகள் தொடர்புகள் இருக்கின்றனதனை காண்கின்றோம்.

சட்ட நடவடிக்கை

அதேபோன்று அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அதற்காக பலபேர் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன அந்த வகையில் சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும்.

மக்களின் தேவை

பல கட்சிகள் எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

இதுவரைக்கும் எந்தவித முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை ஆனாலும் மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் எந்த அபிப்பிராயங்களும் இல்லை.

ஆனால் மக்களின் தேவை எதுவாக இருக்குமாக இருந்தாலும் அந்த தேவைகளின் படி நாங்கள் பயணிப்பதில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


NO COMMENTS

Exit mobile version