Home சினிமா Bact To The Future (First Part): ஒரு சிறப்பு பார்வை

Bact To The Future (First Part): ஒரு சிறப்பு பார்வை

0

ஹாலிவுட் படங்களில் எண்ணிலடங்கா டைம் மிஷின் படங்கள் வந்துள்ளது, அதையெல்லாம் எண்ண ஆரம்பித்தால் இன்று ஒரு நாள் போதாது, ஆனால், என்ன ஜானர் படம் என்றாலும் ஒரு சில படங்களே காலம் கடந்து நம் மனதில் நீங்காது இருக்கும்.

அப்படி 1985-ம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் Robert Zemeckis இயக்கத்தில் Michael J. Fox, Christopher Lloyd நடிப்பில் வெளிவந்த பேக் டூ தி பியூச்சர் படத்தின் ஒரு சிறப்பு பார்வை தான் இது.

கதை

மார்டின் மெக்லே படத்தின் நாயகன், பள்ளியில் படிக்கும் இவனுக்கு ஜெனிபர் என்ற அழகான காதலியும் உள்ளார். அவர்கள் ஒருநாள் டேட் செய்ய ப்ளான் செய்கின்றனர்.

அதற்கு முந்தைய நாள் மார்டின் மெக்லே அவருடைய நண்பர், ஆசான் என்று பல வழிகளில் சொல்லலாம், டாக்டர் ப்ரவுன் மூலம் ஒரு இடத்திற்கு அழைக்கப்படுகிறார். டுவின் பைன் மால் என்ற இடத்திற்கு மார்டின் மெக்லே வர, டாக்டர் ஒரு டைம் மிஷின் கார்-யை கண்டுப்பிடித்ததை மார்டின் மெக்லேவிடம் சொல்கிறார்.

அந்த சமயத்தில் டாக்டர் லிபியன் தீவரவாதிகளிடம் சிக்கிக்கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் மார்டின் அந்த டைம் மிஷின் காரில் ஏறி 1955 செல்கிறார்.

அதாவது 30 வருடத்திற்கு முன்பு, அங்கு சென்றால் யதார்த்தமாக தன் அப்பா அடிப்பட வேண்டிய காரில். அவரை காப்பாற்றி மார்டின் அடிப்படுகிறார். இதனால் மார்டின் அம்மாவிற்கு அவருடைய அப்பா மீது வரவேண்டிய பரிதாப காதல் மார்டின் அதாவது சொந்த மகன் மீதே வருகிறது.

இது சரியில்லை என 1955-ல் இருக்கு டாக்டரை கண்டுப்பிடித்து நீங்கள் தான் என்னை டைம் மிஷினில் அனுப்பினீர்கள் என அனைத்தையும் சொல்ல, டாக்டரும் புரிந்துக்கொண்டு இப்போது அந்த மிஷின் வேலை செய்ய புளூட்டோனியம் இல்லை, அதனால் பெரிய இடி இடிக்கும் போது அதை உன் காரில் பாய்த்து 1985 போகலாம் என்று ப்ளான் செய்கின்றனர்.

அதே நேரத்தில் தன் அம்மாவிற்கு அப்பா மீது காதல் வராமல் போனால், மார்டின் பிறக்கவே வாய்ப்பில்லை என்பதால், தன் அப்பா அம்மாவின் காதலை சேர்த்து வைத்துவிட்டு 1985 எப்படி போனார் என்ற ஜாலி ரைட் இந்த பேக் டூ தி பியூச்சர்.

No other Choice திரை விமர்சனம்

அப்படி என்ன சிறப்பு 

மார்டின் மற்றும் டாக்டர் அவர்கள் கெமிஸ்ட்ரி தான் படத்தின் பலமே, அத்தனை அழகாக குழந்தைகளுக்கும் புரியும் படி இயக்குனர் இந்த டைம் மிஷின் கான்செப்ட்-யை டாக்டர் மூலம் நமக்காக விளக்கியிருப்பார்.

1955-ல் தன் அம்மா-அப்பா காதலுக்கு தானே உதவுவது, டாக்டருக்கு டைம் மிஷின் என்ற கான்செப்ட்-யை உருவாக்க ஐடியா கொடுப்பது என மார்டின் மூலம் இயக்குனர் காட்டிய விதம் சபாஷ் தான்.

அதிலும் டுவின் பைன் ட்ரீ மாலில் தொடங்கிய இந்த கதை, மார்டின் டைம் ட்ராவல் செய்யும் போது 1955-ல் ஒரு மரத்தை இடித்து செல்ல, நிகழ்காலம் அவர் வரும் போது அந்த மாலின் பெயர் லோன் பைன் ட்ரீ மால் என மாறியிருப்பது எல்லாம் அநியாய அலும்பு தான்.

1955-ல் பிஃப் என்ற ஒருவனால் தன் அப்பா கொடுமைப்படுத்து படுகிறார், அதனால் காலம் முழுவதும் மார்டின் குடும்பம் பிஃப்-க்கு அடிமையாக இருப்பதை தன் அப்பாவிற்கு தைரியம் வரவைத்து பிஃபை அடித்து நிகழ் காலத்தில் பிஃப்-யை தன் வீட்டு வேலைக்காரனாக ஆக்குவது எல்லாம் அத்தனை சுவாரஸ்யம்.

அதோடு முதன் முதலாக டாக்டருடன் மார்டின் தன் அப்பாவை சந்திக்கும் போது அவர் ஒரு கோமாளி போல இருப்பதை பார்த்து, டாக்டர் ‘உன்னை எதும் தத்தெடுத்தார்களா’ என கேட்பது, அதோடு தன் அப்பாவிற்கு பெண்கள் குறித்து ஒன்றுமே தெரியாமல் இருக்க மார்டின் ‘நா தான் எப்படி பிறந்தேன்’ என புலம்பும் வசனமெல்லாம் செம ஒன் லைன் கவுண்டர்.

இப்படி பல சுவாரஸ்யம் நிறைந்த பேக் டு தி பியூச்சர் படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் உள்ளது கண்டிப்பாக பார்த்து விடுங்கள்.
 

NO COMMENTS

Exit mobile version