Home இலங்கை சமூகம் தொடரும் சீரற்ற காலநிலை : வவுனியாவில் ஒருவர் மாயம்! பலர் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை : வவுனியாவில் ஒருவர் மாயம்! பலர் பாதிப்பு

0

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 827 குடும்பங்களை சேர்ந்த 2104
பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளளார்.

மேலும், 16 வீடுகள்
சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் வரை கிடைக்கப்பெற்ற தகவலகளை அடிப்படையாக கொண்டு இந்த பாதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பாதிப்பு 

தொடர்ந்தும் மழை பெய்து வருவதாலும், வெள்ள நீர் ஓடி வருவதாலும்
பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வவுனியா வடக்கில் இரு கிராம அலுவலர் பிரிவுகளில் 38 குடும்பங்களைச் சேர்ந்த
119 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர்
உறவினா வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், தற்காலிக பாதுகாப்பான தங்குமிடம்
ஒன்றில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் தங்க வைக்கப்படடுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம அலுவர் பிரிவுகளில் 770
குடும்பங்களைச் சேர்ந்த 1912 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் 370
குடும்பங்களைச் சேர்ந்த 1337 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்க
வைக்கப்பட்டுள்ளதுடன், 3 தற்காலிக பாதுகாப்பான இடங்களில் 43 குடும்பங்களைச்
சேர்ந்த 184 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 10 கிராம அலுவர் பிரிவுகளில் 33
குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

14 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளதுடன், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர் வீடுகளில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் ஒரு கிராம அலுவர் பிரிவல் 8
குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிப்படைந்துள்ளனர். மகாகச்சகொடி பகுதியில்
ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதுகாப்பான தற்காலிக இடத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் இதுவரை 827 குடும்பங்களைச் சேர்ந்த 2104 பேர்
பாதிப்படைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். 16 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன. 392 குடும்பங்களைச் சேர்ந்த 1492 பேர் உறவினர் வீடுகளில்
தங்கியுள்ளதுடன், 5 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 55 குடும்பங்களைச்
சேர்ந்த 220 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச
செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், 5 குளங்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், ஏ9 வீதி போக்குவரத்து உட்பட
சில வீதிப் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

 

NO COMMENTS

Exit mobile version