Home இலங்கை கல்வி கிழக்கு பல்கலை மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் – நீதிமன்ற உத்தரவு

கிழக்கு பல்கலை மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் – நீதிமன்ற உத்தரவு

0

கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University) மாணவி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாணவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவானது நேற்று திங்கட்கிழமை (13) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரீர பிணை

குறித்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் முதலாம் ஆண்டு மாணவி மீது கடந்த 09.10.2025 வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவன் விடுதி பகுதியில் வைத்து கன்னத்தில் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனை அடுத்து மாணவி மீது தாக்குதல் நடத்திய பொலன்னறுவையை சேர்ந்த மாணவனை நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவனை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போது, நீதவான் அவரை ஓரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version