Home இலங்கை அரசியல் ஹிருணிக்காவின் சிறைதண்டனைக்கு எதிரான பிணை தொடர்பில் புதிய நடவடிக்கை

ஹிருணிக்காவின் சிறைதண்டனைக்கு எதிரான பிணை தொடர்பில் புதிய நடவடிக்கை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு (
Hirunika Premachandra) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிற்கு எதிராக பிணை மனு அடுத்த வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெமட்டகொடையில் (Dematagoda) கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.

மேன்முறையீட்டு மனு

இந்தநிலையில், இதற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version