Home சினிமா சூப்பர் ஹீரோவாக பாலகிருஷ்ணா.. ஜோடியாகும் உலக அழகி! யார் தெரியுமா

சூப்பர் ஹீரோவாக பாலகிருஷ்ணா.. ஜோடியாகும் உலக அழகி! யார் தெரியுமா

0

பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் முன்னணி மற்றும் மாஸ் ஹீரோவாக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. சாதாரணமான ஆக்ஷன் ஹீரோ அடித்தால் எதிரிகள் மட்டும் தான் பறப்பார்கள், அதுவே பாலையா அடித்தால் அங்கிருக்கும் கார், லாரி உள்ளிட்ட பல விஷயங்கள் காற்றில் தான் மிதக்கும்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா

இவர் ஒரு வார்த்தை சொன்னால் Train கூட பின்னால் போகும். இதை மற்ற நடிகர்கள் செய்தால் அதை நெட்டிசன்கள் உடனடியாக கலாய்த்து விடுவார்கள். அதே பாலையா செய்தால் ‘அது தான் டா மாஸ்’ என கூறுவார்கள். அந்த அளவிற்கு அனைவரிடமும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

சூப்பர் ஹீரோவாக பாலகிருஷ்ணா

இந்த நிலையில், பாலகிருஷ்ணா நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலகிருஷ்ணா சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கப்போகிறாராம்.

பாலகிருஷ்ணா சூப்பர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போகிறார் என்கின்றனர். உலகளவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version