Home இலங்கை கல்வி நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு

நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு

0

2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது

இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது என வலியுறுத்தகப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714

NO COMMENTS

Exit mobile version