Home சினிமா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சப்தம் படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம்

ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சப்தம் படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம்

0

ஆதியின் சப்தம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆதி. இவர் தமிழில் வெளிவந்த மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் ஈரம், அரவான், மரகத நாணயம் என பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

6 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இவர் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம்தான் சப்தம். ஈரம் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முதல் விமர்சனம்

நாளை வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களது முதல் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

இதில் சப்தம் படம் பார்த்து அனைவரும், படத்தை புகழந்து பதிவிட்டுள்ளார். குறிப்பாக இயக்குநர் அறிவழகனின் இயக்கம், ஆதியின் நடிப்பு மற்றும் தமனின் இசை என படம் சிறப்பாகவும் தரமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த பதிவுகள்..

NO COMMENTS

Exit mobile version