Home இலங்கை சமூகம் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி

0

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா
தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப
விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும், குரங்குகளுமே அவற்றை
சாப்பிடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக
வாழைச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விலையில் வீழ்ச்சி

சந்தையில் கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற
வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக
தெரிவிக்கின்றனர்.

வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என வாழைச்செய்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version