ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
