Home இலங்கை சமூகம் கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: சர்ச்சைக்குரிய ஆசிரியரை ஏற்க மறுக்கும் புத்தளம்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: சர்ச்சைக்குரிய ஆசிரியரை ஏற்க மறுக்கும் புத்தளம்

0

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவியின் மரணம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியரை புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதாக கல்வி அமைச்சு நேற்றையதினம்(08.05.2025) அறிவித்தது.

இதனையடுத்து, குறித்த ஆசிரியர் தங்களுக்கு வேண்டாமென கூறி புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகள்

இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில், இந்த விடயம் தொடர்பான விவாதம் சூடுபிடித்திருந்தது.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பினர் சபையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version