Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான அறிவிப்பு

0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமை தொடர்பிலும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலைய செயற்பாடுகள்

இவ்வாறான சூழலிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகிறது. 

மேலும், “நிலவும் வானிலை காரணமாக விமான அட்டவணைகள் அல்லது தரைவழி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று அதிகாரியொருவர் கூறியதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version