பொலநறுவை, மெதிரிகிரிய பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் மாணவி ஒருவர் நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய மாணவி ஒருவரே நேற்று பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மாணவி தனது பாட்டியுடன் வீட்டில் இருந்தபோது, அவரது தாயாரின் இரண்டாவது கணவரால் இந்தக் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த சம்பவத்தில் பாட்டி காயமடைந்து தற்போது மெதிரிகிரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரை கைது செய்ய மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
