போராட்டத்தின் பின்னர் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பங்களாதேஷை மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அந்நாட்டின் புதிய பிரதமர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மொஹமட் யூனுசுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விரமசிங்க தொலைபேசியில் அழைப்பு விடுத்த போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பங்களாதேஷிற்கு ஆதரவு
பங்களாதேஷிற்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாகவும் ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பங்களாதேஷில் முதலீடு செய்து நாட்டில் தங்கியுள்ள இலங்கை வர்த்தகர்களை அங்கு தங்கி தமது வர்த்தகத்தை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளதாக பங்களாதேஷ் பிரதமரிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.