Home இலங்கை அரசியல் குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதங்கள்! நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதங்கள்! நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

0

மிக ஆழமான பொருளாதாரப் படுகுழியில் நாடு விழுந்தது. இதனால் நாங்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் நெருக்கடிகளுக்கு உள்ளானோம். இந்த நெருக்கடியில் இருந்து யாரும் வெளியேற முடியாது என்ற நிலை ஏற்பட்டபோதும் இந்த நிலைமையை சீர்செய்ய அரசாங்கம் முடிவு செய்தது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

படிப்படியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நடவடிக்கைகள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இதனால் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டன. ஆனால் ஒரேயடியாக குறைக்க முடியாது என்று வணிக வங்கிகள் கூறுகின்றன.

காரணம் திரட்டப்பட்ட வட்டியை வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டும். அது உண்மையும் கூட.

எனவே சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் மூலதனத் தேவைகளை 8 வீதம் அளவில் பூர்த்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற அனுமதிக்கும் திட்டம் உள்ளது.

இவற்றை படிடப்படியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version