Home இலங்கை அரசியல் சஜித்-அனுர விவாதம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி முடிவு

சஜித்-அனுர விவாதம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி முடிவு

0

சஜித் பிரேமதாசவுக்கும், அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. ஆகியவற்றின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி சார்ந்த விவாதமொன்றுக்கு பரஸ்பர அழைத்து விடுத்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள சம்பிக்க ரணவக்க

ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

அதற்காக அண்மையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் மே மாதத்தின் மூன்று நாட்களைக் குறிப்பிட்டு விவாதத்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த நாட்களில் வேறு பணிகளை முன்கூட்டியே பொருந்திக் கொண்டிருப்பதன் காரணமாக அதனை பிறிதொரு தினத்தில் ஏற்பாடு செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது.

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அதன் காரணமாக விவாதத்திற்கான நாள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் விவாதத்தை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை கடிதமொன்றை கையளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

 உத்தியோகபூர்வ அறிவிப்பு 

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வேட்பாளர்களுக்கிடையில் மாத்திரம் விவாதம் நடத்துவது சிக்கலான விடயம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version