Home இலங்கை அரசியல் அங்கஜன் இராமநாதனுக்கு மதுபானசாலை அனுமதி: சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

அங்கஜன் இராமநாதனுக்கு மதுபானசாலை அனுமதி: சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் எனவும் கூறியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார்.

மதுவரி திணைக்களம்

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

சுமந்திரன், சாணக்கியன்

இதேவேளை சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரை பொருட்டாக
எடுக்கத் தேவையில்லை.

எதிர்வரும் காலங்களில் அவர்களும் காணாமல் போய்விடுவர் என்றார்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை
அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தயாசிறி
ஜயசேகர அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில்
தெரிவித்திருந்தார்.

அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் ரணிலுக்கு ஆதரவளிக்க
மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என குற்றச்சாட்டை
வெளியிட்டிருந்தார்.

இதேவேளை தயாசிறி ஜயசேகரவின் கருத்தை மறுத்த அங்கஜன் இராமநாதன், ஆதாரங்கள்
வெளிப்படுத்தப்படாமல் தேர்தல் காலங்களில் சேறுபூசப்படுவதாக விசனம்
வெளியிட்டிருந்தார்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version