Home இலங்கை அரசியல் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு

0

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாவாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கடவத்தையில் (Kadawatha) முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலம்

இங்கு தொாடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரணசிங்க பிரேமதாசவுடைய (Ranasinghe Premadasa) காலத்தில்
ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சேவையாற்றுகின்ற சகோதர சகோதரிகளை பாதுகாப்பதோடு உங்களது உரிமைகளையும் பாதுகாப்போம்.

கடவத்தையில் இருந்து மீரிகம வரையான அதிவேக வீதியின் மீதமுள்ள பகுதியை
நிர்மாணிப்போம்.

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக
மாற்றுவதோடு இலவசக் கல்வியையும் இலவச சுகாதார சேவையும் பாதுகாப்போம்“ என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version