Home இலங்கை அரசியல் மீண்டும் களமிறங்கத் தயாராகும் பசில் ராஜபக்‌ச

மீண்டும் களமிறங்கத் தயாராகும் பசில் ராஜபக்‌ச

0

பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ச மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையில் பரந்துபட்ட எதிர்க்கட்சிக்கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியொன்றை அவர் முன்னெடுத்துள்ளதாகவும் கூறிப்படுகிறது.

அமெரிக்காவில் பசில்

அதற்காக அமெரிக்காவில் இருந்தவாறே இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்தி, அதன் ஊடாக தங்கள் கட்சி இழந்துள்ள செல்வாக்கைத் தூக்கி நிமிர்த்துவதற்கான செயற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version