Home இலங்கை அரசியல் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் பெசில்

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் பெசில்

0

ஶ்ரீல்ஙகா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக பெசில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் வியாழக்கிழமை பெசில் நாடு திரும்புவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெசில் ராஜபக்ச ஒர் அமெரிக்கப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
பெசில் ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா இல்லையா என்பது பற்றி அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

டந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பொதுஜன முன்னணி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போதிலும் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சி குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version