Home இலங்கை அரசியல் பட்டலந்த முகாம் விவகாரம்! இரண்டு வருடங்களுக்கு முன்னரே வெளிப்படுத்திய முன்னணி ஊடகம்

பட்டலந்த முகாம் விவகாரம்! இரண்டு வருடங்களுக்கு முன்னரே வெளிப்படுத்திய முன்னணி ஊடகம்

0

இன்று பரபரப்பை ஏற்படுத்தி வரும் பட்டலந்த வதை முகாம் விவகாரம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்னணி ஐபிசி தமிழ் ஊடகத்தின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி தெளிவாக ஆராய்ந்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது அவரிடம் பட்டலந்த வதை முகாம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், அதற்கு உரிய பதிலை அவர் வழங்கவில்லை.

1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்குவதற்காக பட்டலந்த வதை முகாம் பயன்படுத்தப்பட்டது.

குறித்த முகாமில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர் – யுவதிகள் கைகள், கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில், அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

தற்போது பேசுபொருளாக மாறியுள்ள இந்த விடயம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,

NO COMMENTS

Exit mobile version