Home இலங்கை அரசியல் மட்டக்களப்பு மக்களின் போக்குவரத்து சீர்கேடு: நாடாளுமன்றில் தெறிக்கவிட்ட சாணக்கியன்

மட்டக்களப்பு மக்களின் போக்குவரத்து சீர்கேடு: நாடாளுமன்றில் தெறிக்கவிட்ட சாணக்கியன்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலங்களை புனரமைப்பது மாகாண சபைக்குட்பட்ட விடயம் என்றால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாத விடயம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(18) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாகாணசபைகளும் கூட மத்திய அரசாங்கம் வழங்கும் நிதிகளை பெற்றுத்தான் இயங்குகின்றன.மாகாணசபைகளுக்கும் நிதியை நேரடியாக பெற்றுக்கொள்ளும் அதிகாரமும் இல்லை.அதற்காகத்தான் மாகாணசபைகளுக்கு அதிகாரத்தை வழங்குமாறு நாம் கூறிக்கொண்டிருக்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை,படுவான்கரை என்பது ஒரு களப்பு சார்ந்த விடயம். அந்த மக்கள் நிதி இல்லாதபடியால் தொடர்ச்சியாக அசௌகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே உங்களுடைய காலத்தில் அதை செய்வித்தால் நன்று. ஆனால் நீங்கள் கூறுவது போல் மாகாணசபைக்கூடாக செய்வதென்றால் அது முடியாத காரியம்.

எனினும் இந்த பாலத்தை கடப்பதற்கு தற்போது படகுச்சேவை நடத்தப்படுகிறது. அரசினால் நடத்தப்படும் இந்த சேவைக்கு மக்களிடமிருந்து பணம் அறவிடப்படுகிறது.இந்த படகுச்சேவையில் செல்லும் மக்கள் மிகவும் ஏழ்மைக்குட்பட்டவர்கள் என தெரிவித்தார்.

அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்…

https://www.youtube.com/embed/5_uWi7eVl34

NO COMMENTS

Exit mobile version