Home இலங்கை அரசியல் எம்மை அசைக்க முடியாது – ஜனாதிபதி அநுர பகிரங்க சவால்

எம்மை அசைக்க முடியாது – ஜனாதிபதி அநுர பகிரங்க சவால்

0

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்த குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தனியார் வாகன இறக்குமதி

தனியார் வாகன இறக்குமதி அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் அதற்குரிய திட்ட ஏற்பாடுகள் நடப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

மேலும், வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

2028ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து அடையுமென ஒரு சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் 2028 ஆம் ஆண்டாகும் போதும் எங்களது அரசாங்கமே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அத்துடன், 2022- 2023ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றது போன்றதொரு நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/m6CtQ-tka0M

NO COMMENTS

Exit mobile version