இலங்கையின் திருச்செந்தூர் முருகன் ஆலயம் என போற்றப்படும் மட்டக்களப்பு (Batticaloa) கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தி பாற்குட
பவனியும் மஹா சங்காபிசேகமும் இன்று (07) நடைபெற்றுள்ளது.
மஹா கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிசேகமும் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து
நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்ட பால்குட பவனி இடம்பெற்றுள்ளது.
[XXK3B6Y[
விசேட பூஜைகள்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக இந்த பாற்குட பவனியானது ஆலயம் வரையில்
நடைபெற்றதுடன் ஆலயத்தில் 1008 சங்குகளுக்கு விசேட பூஜைகள் மற்றும் மஹா யாகம் நடத்தப்பட்டுள்ளன.
இந்த யாக பூஜைகள் தமிழில் நடைபெற்றதுடன் இதன்போது பெண்களும் யாக பூஜைகளில்
பங்குகொண்டமை இதன் சிறப்பம்சமாகும்.
மேலும், முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து
பக்தர்கள் கொண்டுவந்த பாற்குடங்களை மூலஸ்தானம் வரையில் சென்று அபிசேகம்
செய்யும் வாய்ப்பும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாலாபிசேகத்தினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் சங்குகள் ஊர்வலமாக
கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகமும் விசேட
பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.