Home இலங்கை அரசியல் மட்டக்களப்பிற்கு மகிந்தவின் சட்டத்தை கொண்டு வர கூடாது.. ஈபி.டி.பி காட்டம்

மட்டக்களப்பிற்கு மகிந்தவின் சட்டத்தை கொண்டு வர கூடாது.. ஈபி.டி.பி காட்டம்

0

மட்டக்களப்பிற்கு மகிந்தவின் சட்டத்தை கொண்டு வர கூடாது என மாவட்ட ஈபி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது
சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன்
என்றா?

உடன்படிக்கை செய்து கொண்டது? இவ்வாறு சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏறி
வாக்களிக்குமாறு கூறியபோது சஜித்துடன் என்ன என்ன உடன்படிக்கை செய்து
கொண்டார்கள் என மக்களுக்கு நா.உறுப்பினர் இரா.சாணக்கியன் தெளிவுபடுத்த
வேண்டும். 

மண்ணெண்ணை நிரப்பும் நிலையங்கள்

கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியன் என் மீது கடுமையான பொய் குற்றச்சாட்டு
முன்வைத்துள்ளார் அந்த பொய்குற்றச்சாட்டானது தேசத்துக்கு மகுடம் என்ற
திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு கடற்றொழிலாளர்களுக்காக 9 மண்ணெண்ணை நிரப்பும்
நிலையங்கள் வழங்கப்பட்டது. 

இதில் 7 மண்ணெண்ணை நிலையங்கள் செயலிழந்து இயங்கா நிலையில் பாழடைந்துள்ளதுடன்
இரண்டு மண்ணெண்ணை நிலையங்கள் மாத்தியம் இயங்கி வருகிறது இந்த இரண்டையும் கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் அந்தந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு குத்தகை
அடிப்படையில் வழங்கினார்.

இதன் பின்னர் கடற்றொழிலாளர் சங்கங்களில் இருந்து நான் பகிரங்க கேள்வி மனுவில் குத்தகை
அடிப்படையில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மண்ணெண்னை நிரப்பு
நிலையங்களை நான் பெற்றிருக்கிறேன்.

அதனை தவறாக அரச அதிகாரிகளுக்கு முன்னாள்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் எனக்கு வழங்கப்பட்டது என அவர்
கூறியிருப்பது நான் வன்மையாக கண்டிக்கின்றேன் அதேவேளை அவரிடம் ஆவணங்கள்
இருப்பின் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன்” என கூறினார். 

NO COMMENTS

Exit mobile version