Home முக்கியச் செய்திகள் மட்டக்களப்பில் இன்று இரவு பரவிய வதந்தி : வீடுகளை விட்டு வீதியில் குவிந்த மக்கள்

மட்டக்களப்பில் இன்று இரவு பரவிய வதந்தி : வீடுகளை விட்டு வீதியில் குவிந்த மக்கள்

0

மட்டக்களப்பு(batticaloa) மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(30.11.2024) இரவு பெரும்பாலான கிராம மக்கள் கடல் வற்றியுள்ளதாகவும், சுனாமி தாக்கம் ஏற்படப்போவதாகவும் தெரிவித்து பெரும் பீதியடைந்து வீதிக்கு வந்துள்ளனர்.

கடற்கரையை அண்டியுள்ள மக்களில் சிலரும்  இடம்பெயர்ந்து உள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

வதந்திகளை நம்ப வேண்டாம்

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம். என தெரிவித்தார்.

பெங்கால் புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறான வதந்தி அந்த மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version