Home இலங்கை சமூகம் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்: மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவலை

எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்: மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவலை

0

நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால
சந்ததியனருக்கு கல்வி கற்பதில் அச்சநிலை ஏற்பட்டு வருவதாக மட்டக்களப்பு
மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இன்று (10.07.2024) 09ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையிலேயே, அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

‘அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே’, ‘பட்டதாரிகள் வீதிகளில் நின்றால்
நாடு முன்னேறுவது எவ்வாறு?’, ‘பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்?’ போன்ற
வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழில் உரிமை

இதன்போது, தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்கள்
எழுப்பப்பட்டதுடன் தமது போராட்டம் தொடர்பிலான பல்வேறு கருத்துகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ‘நாங்கள் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் எமது பட்டக்கல்வியை
பூர்த்திசெய்தது வீதிகளில் போராடுவதற்காகவா?’ எனவும் பட்டதாரிகள் இதன்போது
கேள்வியெழுப்பியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version