Home சினிமா விஷாலால் தான் தர்ஷிகா பிக்பாஸ் 8 விட்டு வெளியேறினாரா?- நடிகையே போட்ட பதிவு

விஷாலால் தான் தர்ஷிகா பிக்பாஸ் 8 விட்டு வெளியேறினாரா?- நடிகையே போட்ட பதிவு

0

பிக்பாஸ் 8

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 இந்த மாதத்தில் முடிவுக்கு வரப்போகிறது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

அடுத்தடுத்து விறுவிறுப்பான டாஸ்க், அதிரடி என்ட்ரி என பிக்பாஸில் எந்த சீசனிலும் நடக்காத விஷயங்கள் நிறைய நடக்கின்றன.

தர்ஷிகா

தற்போது பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய 8 போட்டியாளர்கள் இப்போது உள்ளே வந்துள்ளனர்.

அவர்களில் சிலர் தர்ஷிகா மற்றும் அன்ஷிதா வெளியேறியதற்கு உனது காதல் விளையாட்டு தான் காரணம் என கூற விஷால் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த நேரத்தில் தர்ஷிகா தனது இன்ஸ்டாவில், பிக்பாஸில் உள்ளே நுழைந்துள்ள யாரிடமும் நான் எனது எலிமினேஷன் குறித்து கேட்கவில்லை. 24 மணி நேரம் நிகழ்ச்சி பார்ப்பவர்களின் கேள்வியாக தான் உள்ளது.

வெளியேற்றுவதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்கிறேன். அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்று நான் நம்பவில்லை.

நான் வேண்டுமென்று யாரையும் தவறாக வழிநடத்தவில்லை.

அங்கு என்ன நடந்தது என்பதை நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க வேண்டும்.

அதுவும் அந்த இடத்திலேயே கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்கள் அதை வைத்து ட்ரோல் செய்வதும், அதை கிண்டல் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால் தயவு செய்து அதை எல்லோரும் தவிர்த்து விடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version