Home ஏனையவை வாழ்க்கைமுறை கொழும்பில் அழகு சாதன விற்பனையகங்களில் சுற்றிவளைப்பு

கொழும்பில் அழகு சாதன விற்பனையகங்களில் சுற்றிவளைப்பு

0

வைத்திய பரிந்துரைக்கு அமைய பயன்படுத்தக்கூடிய மற்றும் மருந்தகங்களில் மாத்திரமே விற்பனை செய்யக்கூடிய பல வகையான அழகுசாதனப் பொருட்களை, கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள அழகு சாதனக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் கொழும்பு, புறக்கோட்டையில் நேற்று (18.10.2024) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் அவற்றை கைப்பற்றியுள்ளனர்

இதன்போது, சருமத்தை வெண்மையாக்குவதற்காக சில நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வது தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை அகற்றுவதற்காக இவை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அழகுசாதனப் பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் எனவும் அவற்றை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே விற்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் சஞ்சீவ வீரசிங்க,  “வெண்மையாக ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் அதிகம் உள்ளது.

அழகுசாதனப் பொருட்கள்

இளம்பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இது உடலுக்கு நல்லதல்ல. புறக்கோட்டையில் உள்ள 16 கடைகளில் இந்த அழகுசாதன பொருட்கள் கிடைத்துள்ளன.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version