மலேசியாவிலிருந்து (Malaysia) வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்கவில் பத்து பகிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (18) மேற்கொள்ளப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியன் எயார்லைன்ஸ்
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட குறித்த நபர், மலேசியன் எயார்லைன்ஸ் (Malaysian Airlines) விமானமான எம்எச் 179 மூலம் கோலாலம்பூரில் இருந்து நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை (Colombo Bandaranaike International Airport) வந்தடைந்துள்ளார்.
அவரிடம் நுழைவாயிலில் சோதனை நடத்தப்பட்ட போது பத்து கிலோ 179 கிராம் போதைப்பொருள் ஐஸ் கையிருப்பை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில், டெக்யுலா கொண்ட பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 250 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.