3 years of பீஸ்ட்
தளபதி விஜய் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
மேலும் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கார்த்தியின் சர்தார் 2 பட மாஸ் அப்டேட்.. வேற லெவல்
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மாறாக ட்ரோலில் சிக்கியது. பலரும் இப்படத்தை கிண்டல் செய்தனர். கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படத்தின் வசூல் தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
படத்தின் மொத்த வசூல்
இன்றுடன் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து 3 ஆண்டுகளை கடந்துள்ளது. அதை நினைவூட்டும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 3 வருடங்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? இப்படம் உலகளவில் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மோசமான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தபோதிலும் இவ்வளவு பெரிய வசூல் இப்படம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
