Home முக்கியச் செய்திகள் பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானிக்கு தொடர்ந்தும் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தோனேசிய சுற்றிவளைப்பு

குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா காவல்துறை அதிகாரிகள் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஒகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த குழுவுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version