Home இலங்கை அரசியல் சலுகைகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதியமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

சலுகைகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதியமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

0

ஊழியர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியதற்காக, பொது
சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதி அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது
ஆலோசித்து வருவதாக,எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று
சபாநாயகர் இந்த வாரம் தெளிவாகக் கூறியுள்ளார்.

சட்ட நடவடிக்கை

எனவே, அவர்களை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கருத வேண்டும்.அத்துடன் இந்தச் சூழ்நிலையில் அவர்கள் சலுகைகளைக் கோர முடியாது.

எனவே, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுப்பது குறித்து, எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்
ஜயசேகர கூறியுள்ளார்.

ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து தமக்கு
தெரியாது
எனினும் இனிவரும் காலத்தில், நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர்கள் வெளியிடும்
அறிக்கைகளை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரதி அமைச்சர்கள் வழங்கும்; அறிவுறுத்தல்களைப் பின்பற்ற
வேண்டாம் என்று பொது ஊழியர்களை கேட்டுக்கொள்வதாகவும் தயாசிறி ஜயசேகர
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version