Home ஏனையவை வாழ்க்கைமுறை உடல் எடையை சட்டென குறைக்கும் தேங்காய் எண்ணெய்: இத மட்டும் செய்ங்க !

உடல் எடையை சட்டென குறைக்கும் தேங்காய் எண்ணெய்: இத மட்டும் செய்ங்க !

0

சமையல் முதல் கூந்தல் பராமரிப்பு மற்றும் சரும நலன் என எண்ணெயின் பயன்பாடு என்பது ஏராளம் என்பது அனைவரும் அறிந்ததே.

நாம் பலரும் தேங்காய் எண்ணெயின் பயன்களை தெரிந்தவர்களாக இருந்தாலும் அதனை ஒரு மருத்துவ மருந்தாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனடிப்படையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும்.

தேங்காய் எண்ணெய் 

பொதுவாக அதிகமானோர் காலை எழுந்தவுடன் வெந்நீர், டீ, காபி அல்லது ஜூஸ் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இருப்பினும், இவற்றுக்கு மாற்றாக ஒரு ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயைக் குடிப்பதை தினசரி பழக்கமாக மாற்றினால் உடல்நலத்தில் பாரிய மாற்றங்களை உணர முடியும்.

உடல் எடையை குறைக்க விரும்புவோர், தினசரி காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம்.

இதில் உள்ள நல்ல கொழுப்பு (Good Fat) மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் பசியில்லாமல் நிறைவாக இருக்க உதவுகிறது.

இதன் மூலம், இடைவேளையில் தவறான உணவுப் பழக்கங்களை தவிர்க்க முடியும்.

மேலும், இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி பசி உணர்வை குறைக்கின்ற நிலையில், எடை குறைப்புக்கு இது மிகவும் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version