டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன. ரேட்டிங் குறைவாக பெறும் தொடர்களை முடித்துவிட்டு, அதற்கு பதில் புது தொடர்களை அறிமுகப்டுத்துகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் புது சீரியல் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இரு மலர்கள்
இரு மலர்கள் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சீரியலில் சந்தோஷ் ஹீரோவாகவும், ஜீவிதா, ஹிமா பிந்து ஆகியோர் மெயின் ரோல்களிலும் நடிக்கின்றனர்.
இந்த சீரியல் பற்றிய தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்தது. தற்போது இதன் ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த தொடரும் முக்கோண காதல் கதையா என பெயரை பார்க்கும்போதே சந்தேகம் எழுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
