Home ஏனையவை வாழ்க்கைமுறை அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற சிறந்த ஆயுர்வேத எண்ணெய்…!

அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற சிறந்த ஆயுர்வேத எண்ணெய்…!

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

🛑 தேவையான பொருட்கள்

  1. கடுகு எண்ணெய்- 1 கப்
  2. கறிவேப்பிலை- 2 கொத்து

🛑 பயன்படுத்தும் முறை  

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சேர்த்து சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து பின் குளிர வைக்க வேண்டும்.
  2. பின் அந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  3. அடுத்து இந்த எண்ணெயை உச்சந்தலை முதலில் முடியின் நுனி வரை தடவி ஆயில் மசாஜ் செய்யவும்.
  4. பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
  5. இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.  

Source: https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1784240282

NO COMMENTS

Exit mobile version