Home ஏனையவை வாழ்க்கைமுறை அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்.. இந்த இலை மட்டும் போதும்

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்.. இந்த இலை மட்டும் போதும்

0

பொதுவாக ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை முடி உதிர்வதாகும்.

அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குறித்த எண்ணெயை தயாரிப்பதற்கும் பின்வரும் பொருட்கள் தேவைப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்- 1 கப்

கறிவேப்பிலை- 1 கைப்பிடி

நெல்லிக்காய்- 5

வெந்தயம்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு இருப்பு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

பின் எண்ணெயில் உலரவைத்த கறிவேப்பிலை, நெல்லிக்காய், வெந்தயம் சேர்த்து குறைந்த தீயில் மெதுவாக கொதிக்க வைக்கவும்.

ஈரப்பதம் அனைத்தும் நீங்கியதும், எண்ணெய் நன்கு நிறம் மாறி வரும். பின் இந்த எண்ணெயை ஒரு நாள் முழுக்க அப்படியே மூடி வைக்கவும்.

மறுநாள், எண்ணெயை ஒரு கண்ணாடி ஜாடியில் வடிகட்டி, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும்.

இந்த கறிவேப்பிலை எண்ணெயை தொடர்ந்து முடிக்கு பயன்படுத்திவர முடி நன்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

NO COMMENTS

Exit mobile version