Home இலங்கை சமூகம் நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

0

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 608 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.

இலங்­கையின் சுற்­றுலாத் துறை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு முக்­கியப் பங்­காற்­று­வ­துடன் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 10% இற்கும் அதி­க­மான பங்­க­ளிப்­பையும், மில்­லியன் கணக்­கான வேலை வாய்ப்­பு­க­ளையும் வழங்­கு­கின்­றது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

அழகிய கடற்­க­ரைகள், வன­வி­லங்­குகள், பழங்­கால கல்­வெட்­டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இந்து. புத்த கோயில்கள் உள்­ளிட்ட பல்வேறு விடயங்கள் சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் ஈர்க்கின்ற விடயங்களாக அமைந்துள்ளன.

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 38,744 ஆகும்.

NO COMMENTS

Exit mobile version