Home முக்கியச் செய்திகள் கிடைத்தது இரகசிய தகவல் : காட்டில் கைது செய்யப்பட்ட அறுவர்

கிடைத்தது இரகசிய தகவல் : காட்டில் கைது செய்யப்பட்ட அறுவர்

0

பொகவந்தலாவை (Bogawantalawa) – மஹஎலிய காட்டில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் மஸ்கெலியா (Maskeliya) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள்

மஹாஎலிய காட்டின் ஊடாக பாயும் கால்வாய்களை அழித்து சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை – லொயினோன் தோட்டத்தில் வசிக்கும் சந்தேக நபர்கள் இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களை கைப்பற்றியதாகவும் பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source: https://ibctamil.com/article/bhagwanthlava-6-people-gem-excavated-arrest-1719154642?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version