Home முக்கியச் செய்திகள் யாழில் சூட்சுமமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட நபர்

யாழில் சூட்சுமமாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட நபர்

0

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள
தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி
ஒன்று திருடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவமானது, இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வந்த மாணவர் ஒருவருடைய துவிச்சக்கர
வண்டியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

சிசிரிவியில் பதிவான காட்சி

வெளியே இருந்து வந்த நபர் ஒருவர் உள்ளே சென்று துவிச்சக்கர வண்டியை திருடிச்
சென்ற காட்சி அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

துவிச்சக்கர வண்டியை திருடிச் செல்லும் நபர் தொடர்பாக தெரிந்தால் தகவல்
வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version