Home உலகம் இஸ்ரேலுக்கு பாரிய ஆயுத கப்பலை அனுப்புகிறார் பைடன்

இஸ்ரேலுக்கு பாரிய ஆயுத கப்பலை அனுப்புகிறார் பைடன்

0

 அமெரிக்க (united states)இராஜாங்கத் திணைக்களம், இஸ்ரேலுக்கு (israel)8 பில்லியன் டொலர் (6.4 பில்லியன் பவுண்டுகள்) ஆயுதங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக காங்கிரசுக்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனுப்பப்படவுள்ள ஆயுத கப்பலில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden)பதவி விலகுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுத விற்பனை நிறுத்தம் அழைப்பை நிராகரித்த அமெரிக்கா

காசாவில் போரின் போது கொல்லப்பட்ட அதிகளவான பொதுமக்களின் எண்ணிக்கை காரணமாக இஸ்ரேலுக்கான இராணுவ ஆதரவை நிறுத்துவதற்கான அழைப்புகளை வோஷிங்டன் நிராகரித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம், இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் பெறுமதியான போர் விமானங்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்தது.

இந்த கப்பலில் வான்வழி ஏவுகணைகள், ஹெல்ஃபயர் ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் மற்றும் குண்டுகள் உள்ளன என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு

“சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க, அதன் குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு, ஈரான் மற்றும் அதன் பினாமி அமைப்புகளிடமிருந்து ஆக்கிரமிப்பைத் தடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

 பைடன் 20 ஜனவரி 2025 அன்று வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன், டொனால்ட் டிரம்ப் பதவியேற்கின்றபோது இஸ்ரேலுக்கு இதுவே திட்டமிட்ட கடைசி ஆயுத விற்பனையாகவும் இருக்கலாம்.

ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் சாத்தியமில்லை

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் (donald trump)முன்னர் வெளிநாட்டு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும், அமெரிக்க தலையீட்டைக் குறைப்பது குறித்தும் பேசினார்.

ட்ரம்ப் தன்னை இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராக நிலைநிறுத்திக் கொண்டார், ஆனால் காஸாவில் அதன் இராணுவ நடவடிக்கையை விரைவாக முடிக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

காஸாவில் 45,580 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version