Home இலங்கை சமூகம் கனரக வாகனம் மீது லொறி மோதி விபத்து : சாரதி அதிரடியாக கைது

கனரக வாகனம் மீது லொறி மோதி விபத்து : சாரதி அதிரடியாக கைது

0

ஹட்டன் (Hatton) – நுவரெலியா (Nuwaraeliya) பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனம் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் உதவியாளர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குடாகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனம் மீது மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரதி கைது 

இந்த நிலையில் லொறியை செலுத்திய சாரதி மது போதையில் இருந்ததாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும், ஹட்டன் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு, சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version