Home முக்கியச் செய்திகள் பெரிய வெங்காய இறக்குமதி : விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

பெரிய வெங்காய இறக்குமதி : விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

0

மாத்தளையில் (Matala) பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய அறுவடை இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், பெரிய வெங்காயம் இறக்குமதியால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெங்காய விவசாயிகள் 

இதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரையுள்ளது.

இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயம் உள்ளதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட வரி விதிக்குமாறு விவசாயிகள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், பெரிய வெங்காயத் தோட்டங்கள் பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், விவசாய இரசாயனப் பொருட்களின் அதிக விலையும் மற்றும் தொழிலாளர் கூலியும் ஏற்கனவே அதிக செலவினங்களைச் சுமக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version