பிக்பாஸ் 8
தமிழ் சின்னத்திரையில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது பிக்பாஸ் 8 நிகழ்ச்சி.
கடந்த அக்டோபர் மாதம் மக்களுக்கு நன்கு பரீட்சயமான போட்டியாளர்களுடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இதில் பல மாற்றங்கள், பிக்பாஸின் அதிரடி ஆக்ஷன்கள் என நடக்கிறது.
தீபக் பேச்சு
தற்போது சமூக வலைதளங்களில் போட்டியாளர்கள் பலர் PR டீம் வைத்து வேலை செய்கிறார்கள் என்ற பேச்சு அதிகம் அடிபடுகிறது.
அப்படி சமீபத்திய நிகழ்ச்சியில் தீபக் ராயனிடம், PR வைத்திருப்பவர்கள் அதைப்பற்றி பேசுவார்கள். உன் பக்கத்தில் புகைப்படம் வருமா என தீபக் கேட்க, எனது நண்பர்கள் போட்டோ எடிட் செய்து போடுவார்கள் என ராயன் கூறுகிறார்.
அதற்கு தீபக் எனக்கு அது கூட கிடையாது, என் மொபைல் இங்கே தான் உள்ளது. Organicஆக எது வருகிறதோ அது வரட்டும் என்று தான் நிகழ்ச்சிக்கு வந்ததாக தீபக் கூநுகிறார். அதைக் கேட்ட ரசிகர்கள் என்ன மனிதன் இவர், சூப்பர் என அவரை பெருமையாக பேசி வருகிறார்கள்.
33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொத்து மதிப்பு, சம்பளம் எவ்வளவு தெரியுமா?