Home சினிமா சிலரிடம் மட்டும் அக்கறை.. விஜய் சேதுபதி மீது பிக் பாஸ் 8 போட்டியாளரின் குடும்பத்தினர் புகார்

சிலரிடம் மட்டும் அக்கறை.. விஜய் சேதுபதி மீது பிக் பாஸ் 8 போட்டியாளரின் குடும்பத்தினர் புகார்

0

பிக் பாஸ் 8ம் சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த 7 வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் திடீரென வெளியேறிவிட்டார். அதனால் விஜய் சேதுபதியை தொகுப்பாளராக கொண்டு வந்தது விஜய் டிவி.

ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் முறைக்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் இருந்து வருகிறது. அவரை பாராட்டும் சிலர், விமர்சிக்கும் சிலர் என விஜய் சேதுபதி பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வருகிறது.

ராணவ் குடும்பத்தினர் புகார்

தற்போது பிக் பாஸ் 8ல் போட்டியாளராக இருக்கும் ராணவ் குடும்பத்தினர் விஜய் சேதுபதி பற்றி ஒரு புகார் கூறி இருக்கின்றனர்.

“ராணவ் எப்போது பேசினாலும் அவரை ‘போதும் உட்காரு’ என விஜய் சேதுபதி சொல்லிவிடுகிறார். போட்டியாளர்கள் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது தொகுப்பாளர் வேலை, ஆனால் விஜய் சேதுபதி சிலரிடம் மட்டும் அக்கறையாக நடந்து கொள்கிறார்” என ராணவ் அப்பா குற்றம் சாட்டி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version