பிக்பாஸ் 8
விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.
முதல் சீசனுக்கு கிடைத்த ஆதரவு தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தனை சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் வெளியேற அவருக்கு பதில் விஜய் சேதுபதி கலக்கி வருகிறது.
ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதோடு தொடங்கப்பட்ட பிக்பாஸ் 8வது சீசன் முடிவை எட்டி வருகிறது.
எலிமினேஷன்
பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்டதில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேறிவிட்டனர்.
இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் யோசிக்க நமக்கு கிடைத்த தகவலின்படி சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வந்துள்ளன.