பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, விஜய் சேதுபதி தொகுத்து வழங்க விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என புதிய டாக்குடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இம்மாதம் முடிவடைய எட்டவுள்ளது.
ஹிந்தி பிக்பாஸில் Freeze Task.. கணவரை கண்டதும் ஸ்ருதிகா செய்த செயல், வீடியோ இதோ
போட்டி முடியும் நாட்கள் நெருங்க நெருங்க போட்டியாளர்களை குறைக்க வேண்டும் என ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் செய்து வருகிறார்கள்.
கடந்த வாரம் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறினார்கள்.
விஷால் காயம்
பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்கின் போது ராணவிற்கு கையில் அடிபட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். கையில் கட்டு போட்டிருந்தும் தான் விளையாட்டை தொடர்வேன் என்று கூறியிருந்தார்.
தற்போது இன்றைய எபிசோடின் டாஸ்க் ஒன்றில் விஷாலுக்கு காயம் ஏற்பட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். விஷால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிந்ததும் கதறி கதறி அழுகிறார் அருண்.