பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட போவது யார் என்கிற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.
இந்த வாரம் ஒரு முக்கிய போட்டியாளர் வெளியில் போகலாம் என கூறப்பட்டு வந்தது. அதே போல் ஒரு முக்கிய நபர் தான் வெளியில் அனுப்பப்பட்டார். இருப்பினும் டபுள் எலிமினேஷன் எல்லாம் இந்த வாரம் இல்லை.
பிரஜன்
வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் 9 வீட்டுக்குள் நுழைந்து பல்வேறு பரபரப்பான விஷயங்களை செய்த பிரஜன் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த வார டாஸ்கில் அவர் நெக்லஸை தூக்கி செட்டுக்கு மேலே போட்டது கடும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. .
