Home சினிமா விஜய் சேதுபதியை தாக்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. காதலர் அருணுக்காக கோபமாக வெளியிட்ட வீடியோ

விஜய் சேதுபதியை தாக்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. காதலர் அருணுக்காக கோபமாக வெளியிட்ட வீடியோ

0

பிக் பாஸ் 8ம் சீசனை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த வார எபிசோடில் அருண் நடந்து கொண்ட விதம் பற்றி விஜய் சேதுபதி கோபமாக பல கேள்விகள் எழுப்பினார்.

அருண் பிரசாத்தின் காதலியான நடிகை அர்ச்சனா தற்போது கோபமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் சேதுபதியை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.

சல்மான் கான் – முருகதாஸ் பட இசையமைப்பாளர் இவரா! கோலிவுட்டின் முன்னணி பிரபலம் தான்

தீபக் பேசுனதை விட்டுடீங்க.. விஜய் சேதுபதியை தாக்கிய அர்ச்சனா

ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம் தான். ஆட்கள் குறைந்துவிட்டதால் சமையல் வேலைக்கு ஆட்கள் குறைக்கலாம் என சொன்னார் அருண். மற்ற வேலைகளை செய்ய ஆட்கள் வேண்டும் என்பதால் அவர் அப்படி சொன்னார்.

லேபர் வேலை, skill வேலை என பிரித்து பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் எல்லோரும் சமம் தான். கேம் விளையாடுவது தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவது, வேலை செய்வது அல்ல என்பதை தான் அருண் கூறினார்.

லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் எப்படி நினைக்கிறார் என்பதை மட்டும் ஊதி பெரிதாக்கிவிட்டார்கள். Host விஜய் சேதுபதி உட்பட இதை செய்தார்கள் என அர்ச்சனா குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

பேசாமேலேயே விட்டிருக்கலாமே..

அருண் பயந்துவிட்டார். அவரால் தனது தரப்பு வாதத்தை சரியாக எடுத்து வைக்க முடியவில்லை. இதை ஏன் இவ்வளவு பெரிதாக்கினார்கள் என புரியவில்லை.

“ஷோ முடிந்தபிறகு மைக்கில் பேசியது, கன்பெக்ஷன் ரூமில் பேசியது எல்லாம் damage control மாதிரி தெரிந்தெடுத். அதற்கு பேசாமேலேயே விட்டிருக்கலாமே. இதை ஏன் 40 நிமிஷம் பேசிட்டு இருந்தீங்க” என விஜய் சேதுபதியை தாக்கி பேசி இருக்கிறார் அர்ச்சனா.
 

NO COMMENTS

Exit mobile version